காத்திருப்பேன் கண்ணே இருந்தால் ஜென்மங்கள் - ஏழேழும், அதை கடந்தும்

இங்கு நான் இழந்து நிற்க,
அங்கு நீ பற்றிக்கொண்டாய் போலும் - 'சக்தி'.....

எந்தன் பேனாவும்
சக்தியற்று போனதடி...
'என்னவள்'
என்று உன்னை எழுதிட - இன்று,
எந்தன் பேனாவும்
சக்தியற்று போனதடி.........

விதி போட்ட
கோலத்தை அழித்திட...,
என் விழியில் - இனி
ஒரு துளியும் மிச்சம் இல்லையே....

நிஜத்தில்
உன்னை பார்த்து
விடிந்த பொழுதுகள் எல்லாம் - இன்று
உன் நிழலை பார்த்தே விடியுதடி..........

தினம்
உன் குரல் தானடி- எந்தன் சுப்ரபாதம்....
உன் பெயரே தானடி - எந்தன் ஸ்ரீ ராமஜயம்....
உன் முகமே தானடி - எந்தன் சூர்யோ-தயம்.....
நீ வரும் மாலை தானடி - எனக்கு சந்திரோதயம்......

குடம் கொண்டு
குமுறி அழுதாலும்,
தீராது -இனி திரும்பாது..,
உன்னோடு
வாழ்ந்த/வாழும் நாட்கள்.......?!

கண்கள் ஏங்கி,
ஏக்கத்தில் மங்கி - ஒளி இழக்கும்
அந்த தருவாயிலாவது
பார்த்திடக்கூடுமோ - உன்னை இனி...?!!!

ஆசைகள்
எல்லாம் செத்து,
ஓசைகள் இன்றி - ஊமையாகிவிட்ட
இந்த சூழலிலாவது
கேட்டிட கூடுமோ - உன் குரலை
இறுதியாய் இனி - என்
இறுதியாய்.........................?!!

நம் காதல் சேராது போனாலும்,
நம் கண்கள் இனி பார்க்காது- போயினும்,
நம் மொழிகள் இனி பேசாது- போய்விடினும்,
காத்திருப்பேன் கண்ணே.........,

இருந்தால் ஜென்மங்கள் - ஏழேழும்,
அதைக் கடந்துமாய்....................
உனக்கென்று..........!!
உனக்கே உனக்கென்று.......!!!

உன் விழிதனில் வழிந்த காதல்,
உன் திருவாய் மொழிதனில் வழியும்
நொடிகளுக்காக.......
காத்திருப்பேன் கண்ணே.....
மீண்டும் காத்திருப்பேன்................

உன் தோள் சாய்ந்தே வாழ்ந்திடும்,
உன் மடி சாய்ந்தே வீழ்ந்திடும்,
அந்த நொடிகளுக்காக.......
காத்திருப்பேன் கண்ணே......
மீண்டும் உனக்காக,
இருந்தால் ஜென்மங்கள் - ஏழேழும்,
அதைக் கடந்துமாய் காத்திருப்பேன்...........................!!!!!

எழுதியவர் : கோபி (18-Apr-15, 1:08 pm)
சேர்த்தது : GOPI.M
பார்வை : 159

மேலே