யாரது என்னை பார்ப்பது

மனசாட்சியோ..
கடவுளோ..
சத்தியமோ..
தர்மமோ..
எதுவோ ஒன்று..
..
எனது எல்லா பொய்களையும்..
எனது எல்லா உண்மைகளையும்..
எப்போதும்..
..
சி.சி.டி.வி.
போல்
கவனித்துக் கொண்டே இருக்கிறது..
என்ற எண்ணம் .. மட்டுமே
என்னை
என்னவோ செய்கிறது..
...
ரொம்ப கஷ்டம்..
எல்லோரும் நம்பினால் கூட..
ஒரு பொய் சொல்லி
காதலிக்கவும்
முடிவதில்லை..
கவிதை எழுதவும்
தெரியவில்லை..!
...
அட..
கொஞ்சம் கூட..
மனிதனுக்கு..
சுதந்திரமே..
இல்லை!