சிதறும் சிந்தனைகள்

வறுமைக் கூட்டைவிட்டு
வெளியேவா
வாக்காளக் கிளியே!
சீட்டைக் கொடுத்துவிட்டுச்
சிறுமணியைக் கவ்விக்கொண்டு
சீக்கிரமே உள்ளேசெல்!
***
உறங்குவத் போலும்
எங்கள் வாழ்க்கை;
உறங்கி
விழிப்பது போலும் தேர்தல்!
இதைக் குடியாட்சி என்பதில்
சிலருக்குத் தேர்(று)தல்!
***
இதழ்களைக் காட்டி
மலர்களை அசைத்து
எங்கோ போகிறது
எங்கள் புகைப்படக் கருவி!
இதழ்களைச் சிதைத்து,
மலர்களை உதிர்த்து
எவரோ போராடா
எங்கோ மறைகிறது
எங்கள் மனக் கருவி!
****

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (18-Apr-15, 9:45 pm)
பார்வை : 85

மேலே