உலகில் எந்த உயிரினமும் தனது உணவை சமைத்து உண்பதில்லை
சிந்தியுங்கள் நண்பர்களே.............
உலகில் எந்த உயிரினமும் தனது உணவை சமைத்து உண்பதில்லை.அனைத்து உயிரினங்களும் தங்களின் பசிக்காக மட்டுமே உண்ணுகின்றன. ருசிக்காக உண்பதில்லை. ஒரே விதமான உணவுகளைத்தான் உண்ணுகின்றன. எந்த உயிரினத்தின் உணவு முறையிலும் மாறுதல்கள் இல்லை. மனிதர்கள் மட்டுமே நாவின் ருசிக்காக பலவிதமான உணவுகளைத் ேதடித் தேடிச் சென்று வறுத்து, பொரித்து, அவித்துத் தின்று கொண்டிருக்கிறான். இந்தத் தவறான உணவுப் பழக்கமே மனித இனத்தின் அனைத்து நோய்களுக்கும் காரணமாகிறது.
உடல் நலம் பெற... நோய்கள் நீங்க....
தினமும் ஒருவேளையாவது சமைக்காத உணவுகளான கனிகளையும் கொட்டைப் பருப்புகளையும் உங்களது உணவாக்குங்கள்.
நோயாளிகள் இரண்டு வேளை (காலை, இரவு) கனிகளையும் கொட்டைப் பருப்புகளையும் உண்ணுங்கள்.
எனக்கு வாழ் முழுவதும் நோயே வரக் கூடாது என்ற எண்ணம் உடையவர்கள் அல்லது கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக சமைத்த உணவுகளை நீக்கி கனிகளையும் கொட்டைப் பருப்புகளையும் மட்டுமே உண்ணுங்கள்.
மூன்று நாட்கள் சூரியனால் சமைக்கப்பட்ட பழங்களையும், கொட்டைப் பருப்புகளையும் பசி தீரும்வரை உண்ணுங்கள், அவகைளை மட்டும் உண்ணுங்கள். உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கவனியுங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் தொடர்ந்து சமைக்காத உணவுகளை உண்ணுங்கள். இல்லாவிட்டால் வழக்கம் போல நீங்கள் உண்ணும் உணவிற்கு செல்லுங்கள்.