என் மேல் விழுந்த மழைத் துளியே

நேற்று பெய்த அடைமழையில்
வாகனம் செலுத்தவியாலாத படி
ஒருவர் மட்டுமே ஒதுங்கும்படியான
கூரையின் கீழே ஓடினாள்
ஏதோ ஒன்று தலையில் இடிபட
மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்

யாரிவன்? இவனிடமிருந்து
பார்வையை திருப்ப முடியவில்லையே!
கூந்தலில் ஈரம் சொட்ட,
உடைகள் மழையில் நனைய,
தேக்குமர தேகத்தில் மழைத்துளிகள்
வரைக் கற்களாய் ஜொலிக்க
அம்மழையிலும் அவளினுள் படபடப்பு
தன் புடவை முந்தானையால்
முகத்தை துடைத்துக் கொண்டாள்

மழை நின்றுவிட்டதாவென
மெல்ல கையை வெளியே நீட்டினாள்
நீண்டது இரு கைகள்?
இன்னொரு கை அவளின் கையை
மெல்ல பற்றிக்கொண்டது!
சட்டென இழுத்தாள்,
விடுபட மனம் இடம் தரவில்லை
அவன் அவளின் மெல்லிய
விரல்களில் இதழ் பதித்தான்!
அவள் நாணத்தில் நெளிந்தாள்,
இன்னொரு கையிலுருந்த தன்
வாகன சாவியை தவற விட்டாள்,
மெல்ல அவன் பிடியிலிருந்து விடுத்து
குனிந்து தன் சாவியை எடுத்தாள்,

அவன் கரம் அவள் இடையோடு
மெல்ல இழுத்தான் தன் பக்கம்!
தன் மார்போடு அணைத்துக் கொண்டான்,
அவள் முகத்தில் படர்ந்த
தலைமுடியை விலக்கினான்,
அவள் கவிதை பேசும் கண்களில்
மயங்கிப் போனான்!
காந்தவிழிப் பார்வையில் சொக்கிப் போனான்!
அவள் வலது கண்ணில் முத்தமிட்டான்!
எங்கோ ஒலித்தது, இந்த நிமிடம்
இந்த நிமிடம் இப்படியே உறையாதா?

அவன் பிடியிலிருந்து நழுவப் பார்த்தாள்
ஆனால் முடியவில்லை, அவள் நாடியைத் தூக்கி
செவ்விதழ்களைப் பார்த்தான்!
அப்படியே விட்டுவிடத் தோன்றவில்லை
இரு கன்னங்களில் கைகளைப் பதித்து
இதழோடு இதழ் பதித்தான்!
தனக்குள் ஏதோ மாற்றம் உணர்ந்தவளாய்
சட்டென விலகினாள்,
மழை நின்று போயிருந்தது,
போகப் போகிறாயா? கண்களால் கேட்டாள்!
போகிறேன், நிச்சயம் வருவேன்!
உன்னை எனக்கு மாத்திரமே
சொந்தமாக்கிக் கொள்ள......
என் மேல் விழுந்த மழைத்துளியே!
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.........??????


...............சஹானா தாஸ்

எழுதியவர் : சஹானா தாஸ் (19-Apr-15, 2:34 pm)
பார்வை : 322

மேலே