நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டுள்ளது
சட்டத்தின் ஓட்டையில் எத்தனை
குற்றங்கள் எண்ணி பார்க்கையில்
நெஞ்சு பொறுக்குதில்லை கொலையை
செய்து விட்டு பணத்தை காட்டி
தப்பித்து செல்லும் கயவர்கள்
கூட்டம் ஒரு புறம் இருக்கையில்
ஊளல் செய்து விட்டு பச்சோந்தியை
போல் காலத்திற்கு நிறத்தை மாற்றி
கொண்டு வெளியில் நல்லவர்களை
போல மக்களின் கண்களில் மண்ணை
தூவி நடிக்கும் அரசியல்வாதிகள்
பணத்தாசை மோகம் ஆட்டி வைக்கின்றது
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
அக்கினியை வலம் வந்து திருமணம்
செய்த மனைவியை வரதட்சனை
என்னும் பெயரில் கொடுமை படுத்தி
உயிரோடு எரித்து விட்டு ஒரு வருடம்
பூர்த்தியானதும் மறுமணம் செய்து
வாழ்க்கையை பணத்திற்கு அடிமை
விலை பேசிவிற்கும் பணப்பிசாசுகளும்
பிணங்காளய் வாழும் போது நாட்டில்
நீதி எங்கே கிடைக்கும்
வீ தியில் செல்லும் பெண்ணை வாகனத்தில்
கடத்தி சென்று கற்பை சூறையடி காம
வெறியினை தீர்த்து விட்டு வாகனத்தில்
இருந்து சுழட்டி வீசி செல்லும் கொடிய
காம அரக்கர்களும் அன்று தொடக்கம்
இன்று வரை நடமாடிக்கொண்டு தான்
இருக்கின்றார்கள்
இதனை எல்லாம் காதால் கேட்டு
கண்களை மூடிக்கொண்டு
இருக்கின்றாள் நீதி தேவதை