என் கல்லூரி குழந்தைகளுக்கு உங்களின் ஆசானாய்
என் பயணத்தின் முடிவாக நினைத்தேன்...
இந்த கல்லூரி!!!!
இன்னொரு தொடக்கமாய்....
இன்று உணர்கிறேன்
உணர்வாய்...
உயிராய்....
உண்மையாய்...
இருந்த என் மக்கள்...
உடலால் பிரிந்து!
உள்ளத்தால் உறையபோகும்....
இன்னாளில்!!!
உங்களை தனியே விடுத்து....
தள்ளிப்போய் விட்டேன்...
எல்லைக்கு அப்பால்
நான் இருந்தாலும்....
என் எண்ணங்கள்
உங்களை சுற்றியே....
என்றும் நல்லதை நினைத்து...
நல்லதை சொல்லி...
நல்லதையே செய்து...
நலமோடு வாழ...
உங்களோடு சேர்த்து
நானும் வாழ்த்துகிறேன்...
என்றும் நலமோடு வாழுங்கள்....
இன்று மட்டும் ஏனோ
இதயம்...
துன்பத்தோடு
துடிக்கிறது....
மனதின் வலி
மரணம் போல்
உணர்கிறது....
இதையெல்லாம்
இன்றே அனுபவித்து...
கண்ணீருக்கும் சேர்த்து
இன்றே விடை கொடுங்கள்.... தோழிகளே....
தொடு வானம்
நீங்கள் தொடும் தூரம்...
துணிந்து நடை போடுங்கள்...
உங்கள் இலக்கு
இமயம் அல்ல....
ஆகாயம் என்று
உணர்ந்து உறுதி கொள்ளுங்கள்....
வரும் காலம் உனக்காகட்டும்....
வெற்றிகள் எல்லாம்
உங்களுக்கே
உரித்தாகட்டும்.....
All the best my dears....
With Tears...
SARAN