கல்லூரிப்பயணம்

முதன்முறையாக
வசந்தத்தின்
வாயிலை கண்டோம்....
கல்லூரியின்
வாயிலை கடந்த போது!!...

இனி
வரப்போகும்
நாட்களில்
நம்
சுக துக்கங்களை
பங்கு போடபோகும்
நட்புகளை எண்ணி
ஏகாந்தமாக காத்திருந்தோம் !!...

காத்திருப்பின் பயனாக
வகுப்பறையின் உள்ளே
முதன்முதலில்
கால் வைக்கும் போது .....
உள்ளே இருந்த
முகங்களை கண்டு
சிறு தாயகத்தையும்
பெரும் மகிழ்ச்சியையும் !!....
வெளிகாட்டாமல் ....
நம் இருக்கும் இருக்கையை
தேடி அதில் அமர போன
அந்த நொடி ??

நாட்கள் கடந்தப்பின்பு
நட்பில் வளர்ந்த செடியாய்
நாம் சந்தோசமாய்
பூத்து குலுங்கிய
அந்த நாட்கள் ??
எங்கும் சிரிப்பொலியை கண்ட
அந்த வகுப்பறை ??

தோழிகளிடம்
பணம் கேட்டு கொடுக்காமல்
அவர்களின் கைபையை தேடி
அதில் இருந்து நாம் எடுத்த
சில்லறைகளை வைத்து....
நண்பர்களோடு
நாம் புகைபிடித்த
அந்த ஒரு தருணம் ??

சிறு சிறு சண்டைகள்
பல பல சந்தோசங்கள்
ஒற்றை உணவு தட்டில்
பல கைகள் !!...

இப்படி
மூன்று வருடங்கள்
நொடியாக கடந்து போக ....
கண்ணீர்த்துளியை மட்டும்
பரிசாக நம் எடுத்து போக !!....

இன்றோ நாம்
மீண்டும் இணைத்தோம்!!...
குறுந்தகவலின் வாயிலாக ...
நாம் இழந்த
சந்தோஷ தருணங்களை
மீட்டெடுக்க ......
முடிந்த நம்
கல்லூரிப்பயணத்தை
இனிதே தொடங்குவோம்....
கைபேசியின்
தொடுதிரை துணைக்கொண்டு !!.....

எழுதியவர் : பிரதீப் நாயர் (20-Apr-15, 1:28 pm)
பார்வை : 217

சிறந்த கவிதைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே