மறைந்துபோகும் மனக்கவலைகள் - சுடர்

சிந்திடும் உன் புன்னகையோ
சிதறிடும் முத்துக்கள் ......
தவழ்ந்திடும் உன் அழகோ
இத்தரணியிலே இல்லா வனப்பு .....
உன் நெஞ்சில் வஞ்சமில்லை
உனக்கு நிகர் எவருமில்லை .....
தித்திக்கும் உன்மழலை மொழி
தெவிட்டாத தேன்மழைத்துளி.....
புத்துணர்வூட்டும் உன்விழி
புதுமைகள் பலபடைத்திடும் மொழி .....
உன்செம்பருத்தி தேகத்தில்
தேன்தின்னும் வண்டுகளாய் "கருவிழிகள் "....
மயிலாடும் சோலையில்
மாசற்ற மல்லியாய்
உன் மனத்துளிகள் ......
செந்தாமரை முகத்தில்
முக்கனிச்சாராய் ஒழுகும்
உன் இதழ் அமிர்தங்கள் ....
வானவில்லின் வண்ணமகளே
வந்து கதைப்பேசு -என்
வாழ்நாளெல்லாம் போதாது -உன்
வாய்மொழி கீதம் கேட்க ....
சோர்ந்துபோகும் நேரமதில் -உன்
சாந்தமுகம் காண
மறைந்துபோகும் மனக்கவலைகள் ......

எழுதியவர் : இரா.சுடர்விழி (20-Apr-15, 2:10 pm)
பார்வை : 665

மேலே