இக்கட்டான சூழ்நிலை

பதினெட்டு வயது நிரம்பிய ஒரு மழலை ...அவள் நடவடிக்கைகள் எல்லாம் அவ்வாரே இருந்தன..தனது ஒன்றரை வயதில் தந்தையை தொலைத்தாள். அவர் எங்கு சென்றால் என்று எவருக்கும் தெரியாது.அவள் வாழ்ந்த நாட்களில் கூட இருந்தவள் அவள் தாய் மட்டுமே..
தந்தை இல்லா பாசத்தை அவள் தாயே தந்து விட்டாள்..
முன்னே சொன்ன அவளது 18 வயதில் அவள் அப்பா வந்தார் ..ஒரு பெண்ணிற்கு புதிதாக அறிமுகமாகும் தந்தை இந்த கொடுமையை யாரிடம் சொல்ல..இப்படி பட்ட நிலைமையை அவள் எதிர் பார்க்கவில்லை..இதுவரை பார்த்திராத ஒரு மனிதரை கூட்டி வந்து இது தான் உன் தந்தை என்றால் யாருக்கு தான் அதிர்ச்சியாகாது.
அவளக்கு மெல்லவும் முடியவில்லை முழுங்கவும் முடியவில்லை அவள் சோகத்தை சொல்ல கூட வார்த்தை இல்லை இத்தனை நாட்களுக்கு பிறகு வந்த அவர் மகளை இருக்கி அணைக்கையில் அவரது பாசம் கூட அவளை வாட்டியது யாரோ ஒருவரை அணைத்தது போல...இவர் ஏன் வந்தார் என அவள் மனம் தினமும் கேட்டுக்கொண்டிருந்தது காரணம் அவர் மகளை சந்தேகிக்க ஆரம்பித்துவிட்டார் தவறே செய்யாத போதும் கூட..அவள் ஆண்களிடம் பேசுவதை அவர் துளியும் விரும்பவில்லை..அவ்வாறு பேசினால் தவறு என நினைத்தார் அப்படி தவறு செய்த போது நம்பிய அவள் அப்பா அவள் உண்மையாக இருந்த போது நம்ப மறுத்து விட்டார்..வேறு வழியில்லாமல் அம்மாவிற்காக அவரை அப்பாவாக ஏற்றுக்கொண்டாள்
இன்றுவரை அதற்காகவே அவள் அவரை அப்பா யென்று அழைக்கிறாள்..இனியும் அவள் அம்மாவிற்காக வாழ்ந்து கொண்டிருப்பாள் என்றும் தாய்மையின் அன்பை உணர்ந்து...
அப்பா மகளை புரிந்து கொள்ளும்வரை
மகள் அப்பாவின் அன்பை முழுதாக ஏற்கும் வரை இன்னிலை தொடரும்....

எழுதியவர் : ஜனனி (20-Apr-15, 2:34 pm)
சேர்த்தது : Janani shan
பார்வை : 128

மேலே