அடோப் போட்டோ ஷாப்பினால்* அழகுபடுத்தப்படும் அனைத்தில்

அழகான குழந்தையின் சிரிப்பு

அது அம்மாவிற்கு தரும் முத்தம்

ஒற்றை ரோசாப்பூ ஒருத்திகாய் மலரும்போது

உயரத்திலிருந்து வீழ்கின்ற நீர்வீழ்ச்சி ஒரு தேவதையை போலிருக்கும்போது

வானவில் மட்டுமே வானமாய் இருக்கும்போது

வாசல்வரும் தென்றலை திரை சீலை வரவேற்க ஆடும்போது

விழுதுகளாய் பரவினாலும் ஆலமரம் முதன்முதலாய் முளைவிடும்போது

வியர்வையின் ஒருதுளியை விஞ்ஞானத்திற்க்காக
நிறபிரிகையாக்கும்போது

ஓலை குடிசையிலிருந்து விழுகின்ற நீர் மழைக்குப்பின் மண்ணில் குழிதோண்டும்போது

ஒற்றை புழு வெயிலில் துடிக்கும்போது ஓர் எறும்பு
இதனை இழுத்துவிடும்போது

மாணவர் கட்டிய மணல்வீட்டில் மகிழ்ச்சியாய் அட்டை குடியேறும்போது

மாசக்கணக்கிலும் வெளுக்காத கருமேகம் கதிரவனை மறைத்து கண்ணுக்கு குளிர்ச்சியை தரும்போது

ஆட்டுக்குட்டி மூன்றாம் நாளில் அந்தரத்திற்கு துள்ளும்போது அப்படியே நிறுத்தி பறப்பதாய் காட்டும்போது

அழுக்கடைந்த சேலை தலைப்பில் ஐம்பது பைசா சாக்லேட்டை அவள் இரண்டு குழந்தைக்கும்
அன்பாய் கடித்து தரும்போது

இன்னும் எத்தனையோ இருக்கிறது இந்த போட்டோ ஷாப்பில்* அழகு படுத்த

இருந்தாலும் இத்துடன் விட்டு விடுகிறேன் ஏனென்றால் இப்போது நான் பார்ப்பது
அரசியல்வாதின் அகோரமான முகத்தையும்
அழகுபடுத்தி காட்டுவதால் அதற்காய் வருத்தப்பட்டு

* பிறமொழிச்சொல்


எழுதியவர் : . ' .கவி (4-May-11, 7:39 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 519

மேலே