ஓர் இருக்கையின் நினைவுகள்
மாலை நேரம்
இயற்கையோடு அமைதி சூழ்ந்த
அந்த இடத்தில் இருக்கும்
இருக்கையில் யாருக்குதான் அமர ஆசையில்லாமல் போகும்....
முதலில் கவிஞன் வந்தான்
கையில் எழுதுகோல் இல்லை
காகித பக்கமும் இல்லை
ஆனால் ஐந்து வரி கவிதையை
அரைநொடியில் கிறுக்கி வைத்து போனான்
இருக்கையின் ஓரமாய்....
அடுத்து காதல் தோல்வியுற்ற ஒருவன் அமர்ந்தான்
அமைதி இழந்த அவன் இதயத்தில்
அனுமதி இன்றி வந்தது சில நினைவுகள்
அதே இருக்கையில் காதலியோடு அமர்ந்து
மடிசாய்ந்த பொழுதுகள் நினைவுக்கு வர
புலம்பியபடி எழுந்தான் மறந்திரு மறந்திரு
என்று சொல்லிகொண்டேன் சென்றான்....
அடுத்து வயதான முதியவர்
மூக்கு கண்ணாடியை கலட்டி
துடைத்துவிட்டு மீண்டும் போட்டு பார்த்தார்
அப்போதும் அவருக்கு தெரியவில்லை
திட்டிக்கொண்டே சென்றார்
உக்கார ஓர் இடம் இல்லையே என்று....
அடுத்து காதலர்கள் வந்தனர்
கைகளும் கால்களும் பின்னிகொள்ள
உதடுகள் ஈரமாகி
உடல் முழுவதும் சூடு பரப்பி
இருக்கையை படுக்கையறை என
மாற்ற முயல யாரோ வர
பதறியடித்து மறைவான இடத்திற்கு இடமாறினார்....
அடுத்து நண்பர்கள் கூட்டம்
நான்கு பேர் அமரகூடிய
அந்த இருக்கையில் ஆறு பேர் அமர்ந்து
வாய் வலிக்க பேசி சிரித்துவிட்டு
சிகரெட்டை அணைப்பதாய் நினைத்து
இருக்கைக்கு சூடு வைத்துவிட்டு
அவ்வழியே வந்த பெண்களை பின்தொடர்ந்தனர்....
அடுத்து பிச்சைகாரன்
சில்லறை கேட்டே பழகிப்போன
அவனின் சிம்மாசனம்
அரசனாய் அமர்ந்து சில்லறையை
எண்ணி மறைத்து வைத்துகொண்டு
மீண்டும் புறபட்டான் அம்மா பசிக்குது.....
அடுத்து நாய்க்குட்டி
எதுக்கு ஓடுகிறோம் என்று தெரியாமல்
ஓடி வந்து இருக்கையின் ஓரமாய்
ஒருகால் தூக்கி ஈரமாக்கி
மீண்டும் ஓட அரமித்துவிட்டது.....
அடுத்து குழந்தை
எவ்வளவோ முயன்றும்
முடியவில்லை
இருந்தாலும் பலமுறை முயற்சித்தாள் பலனில்லை
இறுதியாய் அப்பா காம்ப்ளேன் வாங்கி தாங்க
இருக்கை யெல்லாம் கிண்டல் பண்ணுது....
அடுத்து அரசியல்வாதி
மீச்சி கிரைண்டர் லேப்டாப்
இன்னும் என்ன சொல்லி ஏமாத்தலாம்
என்று அவன் யோசிக்கும் போதே
அலைபேசி அழைத்தது
என்னங்க நம்ம வீட்டுக்கு ஜிபிஜ ரைடு வத்துருகாங்க
மனைவி கதறி அல
பதறி முன் ஜாமீன் வாங்க புறப்பட்டார்....
இறுதியாய் அனாதை வந்தாய்
தாய் மடி கண்டதில்லை
ஆனால் பலநாள் இந்த இருக்கையே
அவனுக்கு தாய்மடி
தலை சாய்ந்து உறங்க ஆரமித்தான்....
இதுவரை இருக்கையென இருந்த அது
அனாதை படுத்ததும்
தாயாக தாலாட்டு பாட ஆரமித்தது....
ஓர் நாள் இருக்கையை அகற்ற
இயந்திரம் முயலும் போது
அனைவரும் வேடிக்கை பார்த்தனர்
அந்த அனாதை மட்டும் கண்ணீர் விட்டு கதறி அழுதான்....