நகைகள் ஜாக்கிரதை
நகைகள் ஜாக்கிரதை....
====================
ஆயிரமா வெல குடுத்து ஆபத்ததான்
கழுத்துல கையிலதா(ன்) மாட்டிக்கிறோம்
பளபளப்பா ரோட்டுலதா(ன்) நடக்கையிலே
திருடன கூவி...கூவித்தான் அழைச்சிக்கிறோம்..!!
ஆசையா வாங்கி வாங்கி சேத்த நகை
அம்போன்னு போகுதிப்போ அறுப்பினிலே
குந்தி.. குந்தி அழுதாலும் கெடைப்பதில்ல
போனது கூப்பாடு போட்டாலும் வருவதில்ல...!!
திண்டுக்கல் பூட்ட கூட ஒடச்சிடறான்
களவாணி கண்டபடி கன்னக்கோல் போட்டுடறான்
ஆர்ப்பாட்டம்... கூச்சல்தான் போட்டுப்புட்டா
ஆளையே துண்டமாத்தான் ஆக்கிடறான்...!!
ஆசைக்கு தங்கத்ததான் வாங்கி வெச்சி
ஆபத்த கூடத்தான் கூட்டிக்கிறோம்
அதிகபட்ச வெலகொடுத்து துன்பத்ததான்
ஆரத்தி காட்டி.. காட்டி.. அழைச்சிக்கிறோம்..!!
நோட்டம்விடும் திருட்டு கும்பல் நாட்டுலதான்
ஆட்டையதான் போடுறாங்க அடங்கலையே
நகை நட்டு போனா கூட தேவலையே - பொன்னோட
உசிர எடுத்துப் போவதுதான் தாங்கலையே...!!
அட்சய திருதியையின்னு கெளப்பிவிட்டு
அநியாய கொள்ளையொன்னு நடக்குதிப்போ
அறியாத சனங்கள் எல்லாம் அல்லல்பட்டும்
கடன்பட்டும் வாங்குறாங்க பொட்டு தங்கம்..!!
தீராத வியாதியின்னு ஆகிப்போச்சு - தங்க
வியாபாரிக்கு திருதியைதான் சாதகமாச்சு
அள்ளி அள்ளி எடுக்குறாங்க லாபத்ததான்
ஆண்டு வருமானம் இந்த நாளுலதான்...!!
புத்திகெட்ட சனங்களுந்தான் கேட்டுக்கங்க
கத்தி முனை வழிப்பறிதான் பாத்துக்கங்க
நூறு இரு நூறுக்கெல்லாம் நகை இருக்கு
பாதுகாப்பு தானே போலி நகை நமக்கு..!!
*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+* +*+* +*+* +*+* +*+*
(குறிப்பு: இந்த தலைப்பினை அளித்து கவிதை எழுத பணித்த "இலக்கிய சோலை" மாத இதழின் ஆசிரியர்
திரு சோலை தமிழினியன் அவர்களுக்கும் இணை ஆசிரியர் திரு துருவன் அய்யா அவர்களுக்கும் எனது நன்றிகள்.
இந்த மாத கவி அரங்கில் வாசிக்கப்பட உள்ள கவிதை " நகைகள் ஜாக்கிரதை ")