புற்றீசல் நாங்கள்

ஓர் மழைக் காலத்தில்
மண்ணுலகம் விடுத்து
விண்ணுலகம் கான

சிறகோடு
உயிர்தரித்துவிட்டோம்

சிறகடித்து பறந்தோம்
சில மணி துளிகள்

ஏனோ உதிர்ந்தன
உயிர்ச் சிறகுகள்

இறைவனுக்கு தொல்லையோ
எங்கள் பிறப்புக்கள்

சிறகிழந்து நடை பயின்றோம்
சிந்தும் கதிர் ஒளியில்
உயிர் தொலைத்தோம்

புற்றீசல் நாங்கள்
புதிதாக பிறப்போம்


எழுதியவர் : பிரபுமுருகன் (27-Jun-10, 6:34 pm)
சேர்த்தது : Prabhu
பார்வை : 473

மேலே