எளிமை
எளிமை வாழ்வு சிறு வயதில்
தொடங்கி அனுபவித்தால்
எந்த கட்டத்திலும் வாழ்வு சுமை இல்லை
ஏற்றம் வந்தாலும் பெருமை இல்லை
இறக்கம் வந்தாலும் சிறுமை இல்லை
அலைகள் அற்ற கடல் போல
அமைதி என்ற படகில் நகர்ந்து செல்லலாம்
இளமையில் எளிமையின் உதாரணம்
நம் முன்னோர் வாழ்ந்து காட்டிய பாதை
நிழலாடுகிறது நம் கண்முன்னே
பணம் இருந்தும் எளிமையில் வாழ்ந்தனர்
அன்று ஏன் எதற்கு பணம் பொருள் நிலை அற்றது
இந்த எளிமை வாழ்வு ஓன்று தான்
நம்மிடம் நிரந்தரம்
மனதில் ஆசை கோபம் பொறாமை அறவே ஒழிக்க
இந்த எளிமை வாழ்வே தகுந்ததும்
தன்மானம் மிக்கதுவாகும்
எளிமையை நேசிப்போம்
என்றும் அமைதியை சுவாசிப்போம்