உலகம் என்றால் மகள்தான் எனக்கு
உலகம் என்றால் மகள்தான் எனக்கு!!
விட்டேத்தியாய் திரிந்த என்னை
அப்பாவாய் பிறக்கவைத்தாய் நீ-பிறந்து!!
ஆணின் பெண்மையின் பரிட்சயத்திற்கு
முதல் எல்லை தாயென்றால்
முடிவெல்லை நீ!!
முதலே தொடங்காத என்னை
முழுமையாக்கியவள் நீ!!
விழித்திரையில் ஒரேஒரு
காட்சி மட்டும் நிரந்தரமாய்
ஒட்டிகொண்டது - ஆம்
முதல்முதலில் நான் பார்த்த
முழுமதிபோல் உந்தன் முகம்!!
ஆயிரம்அகவை ஆனாலும்கூட
நெஞ்சில்நிற்பது அம்முகமே!!
எல்லோரும் சொன்னார்கள்
மார்பிலேநீ உதைகிறாய் என்று!!
எனக்கு மட்டுமே தெரியும்
தட்டிதட்டி என்னிதயத்தை
புதிதாக்கிறாய் என்று!!!
எதுவுமே தரவில்லை-என
இறைவனிடம் தினம்புலம்பல்!!
நீபிறந்தவுடன் அவனிடம்
நன்றி சொல்லமட்டுமே செல்கிறேன்!!
நீபேச ரெண்டு வயதானதென்று
எல்லாரும் சொல்கிறார்கள்!!
நீயும் நானும் விழிகளிலே
பேசி கொண்டோமே நீகூட
யாருக்கும் சொல்லவில்லை!!
அதுவரை நீ சொன்ன
ரகசியங்கள் எனக்கு மட்டுமே
புரிந்தன!
அகழ்வாராய் தாங்கும்
நிலத்தை நான் மன்னிப்பதில்லை
உன்அழுகைக்குஅ வள்காரணமென்றால்!!
ஆண்மைக்குஆண்மையும்
பெண்மையையும்ஒருசேர
தந்தவள்நீ!
நீ பிறந்தது முதல்
தினம் நான் பார்க்கும்
முதல்கடை முகம் உனதே!!
கண்களில் விழும் தூசி
கொசுவின் முத்தத்தின் வலி
எத்தனை பெரியவலி என்று-உன்
அனுபவத்தில் தானே தெரிந்தது!!
கதவில் நீயிடும் போர்
அதனிடுக்கில் உன்விரல்படும் விழுப்புண்
உயிர் போகும் வலிஎனக்கு!!
காது குத்தும்போது
உனை பார்த்து சிரித்தவரை
குறிப்பெடுத்து வைத்துள்ளேன்!
பின்னர் சொல்லலாமென்று!!
எனைபோல நீயா
உனைப்போல நானாநீ
பிறந்ததிலிருந்து எனக்கிந்த ஐயம்
தெரிந்தால் சொல்லேன்!!
உயிர்ப்பிக்கும் ஊக்கம் நீ
கவலைக்கு களிம்பு நீ
முழுமைக்கு முழுமை நீ
சிரிப்புக்கு காரணி நீ
சுமைகளுக்கு சுகம் நீ!!
வயதானபின் எனைஈன்ற
அன்னை நீ என்
வாழ்க்கைக்கு வழி சொல்லும்
கலங்கரை விளக்கம் நீ!!
உலகம் என்றால் மகள்தான் எனக்கு
என் செல்ல மகள் அவள்தான்எனக்கு!!