ரத்து ரணத்தின் சொத்து

..."" ரத்து ரணத்தின் சொத்து ""...

வாழவேண்டி கை பிடித்து
உயிர் உள்ளவரையிலும்
உனக்கு நான் எனக்கு நீ
இறுதியாய் ஒப்புவைக்க
நீதிமன்றத்து படிகளிலே !!!

அன்பென்று உயிரென்றும்
அரவணைத்து வாழ்ந்தவனோ
ஆசைகள் தீர்ந்தவுடன்
ஆகாது இவளென்றே
அடுத்தவளை தேடுகிறான் !!!

தனக்கென்ற பேராசை
சொல்லார் சொல்கேட்டு
இல்லாள் மாறிவிட்டால்
இருந்திட்ட இன்பத்தை
இல்லாது ஆக்கிவிட்டாள்

விளையாட்டாய் சொன்ன
வார்த்தைகள் எல்லாமே
வினையாய் படையெடுக்கும்
விபரீத உருவத்திலே தன்
தலைவிரித்து உயிரெடுக்கும் !!!

வாழ்வின் எல்லையடைந்திட
விட்டும் கொடுப்பது வாழ்வா
விட்டுக் கொடுப்பதே வாழ்வா
இதற்காய் அர்த்தம் அறிந்தால்
அறிதாகிடும் விவாகரத்து !!!

என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (22-Apr-15, 10:51 am)
பார்வை : 408

மேலே