எனக்கு பிடித்த பாடல் வரிகள்

சமீபத்தில் வெளிவந்த பாடல்களில் என்னை ஈர்த்த பாடல் வரிகள்
மீண்டும் ஒரு முறை கவிப்பேரரசு "கவிப்பேரரசு வைரமுத்து" அவர்கள் அவருடைய காதல் பாணியில் கடுகளவும் குறையால் காதல் வரிகளை நெஞ்சை தொடும் வகையில் எழுதியுள்ளார்
இதோ அப்பாடல் வரிகள் உங்களுக்காக வாசித்து கண்டிப்பாக உங்கள் கருத்துக்களை பகிரவும் .
***********************************************************************************************************************************************


தொடு வானம் தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும்
அட தொலைந்துமே போகும்
தொடு வானமாய் பக்கம் ஆகிறாய்
தொடும் போதிலே தொலைவாகிறாய்

தொடு வானம் ..

இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும் முன்னே கண்ணே காண்பேனோ
இல்லை மேலே பனி துளி போல்
இங்கும் அங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம்
பொன்னே பூந்தேனே (2)

வலி என்றால் காதலின் வலி தான்
வலிகளில் பெரிது
அது வாழ்வினும் கொடிது
உன்னை நீங்கியே உயிர் கருகிறேன்
வான் நீலத்தில் என்னைப் புதைக்கிறேன்

இதயத்திலே தீ பிடித்து ....

காதல் என்னைப் பிழிகிறதே
கண்ணீர் நதியாய் வழிகிறதே
நினைப்பது தொல்லை மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே

காட்டில் தொலைந்த மழை துளி போல்
கண்ணே நீயும் தொலைந்ததென்ன
நீரினைத் தேடும் வேரினைப் போல
பெண்ணே உன்ன கண்டெடுப்பேன்

கண்கள் ரெண்டு மூடும் போது
நூறு வண்ணம் தோணுதே
மீண்டும் கண்கள் பார்க்கும் போது
லோகம் சூனியம் ஆகுதே

சிறு பொழுது பிரிந்ததுக்கே
பல பொழுது கதறிவிட்டாய்
ஜென்மங்களாய் பெண் துயரம்
அறிவாயோ நீ


ரசிகன்
ஏனோக் நெஹும்

எழுதியவர் : வைரமுத்து (22-Apr-15, 11:20 am)
சேர்த்தது : Enoch Nechum
பார்வை : 879

மேலே