கண்ணீரால் அணைக்கிறேன்

காதல் தோற்றத்துக்கு
குற்றம் சொல்லேன் ...
உன்னை படைத்த ...
இறைவனை நிந்திக்கிறேன் ...!!!

என் கவிதைகள்
உன்னை பற்றிய தீ
பந்தங்கள் - கண்ணீரால்
அணைக்கிறேன் ....!!!

நீ அழகு ...
உன் காதல் .....
அழகாகவில்லை...
காத்திருப்பேன் -உன்
அழகு மறைந்தாலும்
காதலுக்காய் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;792

எழுதியவர் : கே இனியவன் (23-Apr-15, 8:40 am)
பார்வை : 529

மேலே