குட்டிச்சுவரில் கொலுசுச் சத்தம்
அம்தோ மின்னும்
எத்தில் அமினும்
மழையென நெஞ்சில்
பொழியுது பார்♥
வேகத்தடையில்
கண்கள் நிற்க
வெட்கமாய் மின்னல்
வெட்டுது பார்♥
இரட்டைச் சடையில்
இதயம் பின்னிட
மென்சூடு உடலில்
பரவுது பார்.♥
நியூரோ கெமிக்கலில்
நிலவுகள் நீந்திட
நித்திரையெல்லாம்
வெளிச்சம் பார்....♥
பருவத்தில் இம்மழை
பரவசம் தந்திட
பரிட்சையில் எடுப்பது
முட்டை பார்....0
தேகத் தாளில்
கவிதை என்றே
விடலைப் பேனா
வரைய ஒன்றே
வரிகளில் இங்கே
அர்த்தம் இல்லை
சுகந்தானே இந்த
எதுகை மோனை
இராத்திரி நேரம்
விட்டம் சொலிக்க
விழிகளில் நேரும்
மாயம் என்ன
பொய்யென மனதும்
நம்புவதில்லை
கனவுகளதுவே காட்சிப்பிழை.
கோஸ்டரிகோ
அவளின் நெருக்கம்
லாசுவகோசு
நிரம்பப் பித்தம்.
காதல் என்றால்
புனிதம் புனிதம்
புத்தகத்தில்
அவன் முகம் நித்தம்.
நரம்பின் முடிச்சில்
வயதும் மாட்டிட
எல்லாம் புரிந்தபின்
ஊரே சிரித்திட
சொல்வது எல்லாம்
உண்மை உண்மை
பலியானது இங்கே
காதல் இல்லை.
--கனா காண்பவன்.