முதுமை
முதுமை
.....,,,,,,,,,,,,,,,
சாய்ந்தகதிரை பாதி
அவரை விழங்கிஇருந்தது!
கைப்பிடி தேநீரும்,
காலை பத்திரிகையும்,
செய்திப்பசியை தணித்துக்கொண்டுருந்தது.
மூக்குகண்ணாடி அடிக்கடி சறுக்கிவிழ""
முயற்சிக்கையில்,
முகச்சுருக்கங்கள் பிடித்துவைத்துக்கொண்டிருந்தன.
பத்திரிகை பக்கங்களில்
வன்முறைதடயங்கலும்,
அரசியல்சாயங்கலும்,
விளம்பரகூப்பாடுகலும்,
முணுமுணுக்கவைத்தாலும்
இடைஇடையே வந்துபோகும்
பேத்தியின் ஒற்றைமுத்தம்""""""
மறைந்துபோன ஒரேமகளின்
புன்னகையை ஞாபகமூட்டின!
கண்களில் கண்ணீர் சொரிய,
இந்த ஒத்தனம் ஒன்ரே போதும்
வாழ்வில்!
இந்தபழுத்தகட்டைக்கு
இன்னும் சிலகாலம் ஆயுள் தா"""
என்று கெய்சியது மனசு!!!
லாஷிகா
""""""""""""""""""