ஜோடிக் கிளிகள்
கூட்டுக்குள்ளே ஜோடிக் கிளிகள்
வீட்டு சாப்பாடு நீர் பழங்கள் விதம் விதமாய்
உறவுகளுடன் உண்டு மகிழ்ந்தும்
கொஞ்சி குலாவி பாடியும் பேசியும் ஆனந்தமாய்
வீட்டில் செல்லப் பிராணிகளாய் வாழ்ந்தன
ஓர் நாள் சின்னப்பையன் ஆசையில்
கூட்டைத் துறந்து விட
இரண்டு கிளிகளும்படக்கென்று
ஒன்றன் பின் ஒன்றாக பறந்ததும்
தென்னங்கீற்றில் அமர்ந்து பேசத் தொடங்கின
சிறையில் இருந்தோம் சிந்தித்து சிரித்துப் பேச முடியவில்லை
இன்றுதான் நம் சுதத்திரம் நம் கைகளில்
மகிழ்ச்சிதானே என்று மனம் நிறைந்து
வாய் விட்டு பேசின
அவற்றின் மனங்களிலும் நிறைய
ஆசைகள் பாசங்கள் ஏக்கங்கள்உருவாகும் காலங்கள்
நாம் உணர முடியாதன
நாம் செய்வது நமக்கு சரியாகத் தோன்றுகின்றது
அந்த சிறிய உயிர்களின் விருப்பங்கள் புரிவதில்லை நமக்கு
அவற்றைக் கூட்டில் அடைத்து விட்டால் நாம் மகிழ்கிறோம்
அவற்றின் மகிழ்ச்சி கூட்டுக்குள்ளே அமிழ்ந்து போகிறது
மனிதன் இவ்வாறாக அற்ப உயிர்களை வதம் செய்கிறான்
உயிரும் உணர்வும் எல்லா உயிரினங்களுக்கும் உண்டு
என்பதை உணர மறுக்கிறோம்
அந்த ஜோடிக் கிளிகளின் அழகிய வாழ்க்கை
ஆகாய வெளியில் உல்லாசமாய் பறந்தும்
உண்டும் உறவு கொண்டும்
சோலைகளில் துயில் கொண்டும்
துளி அளவும் அச்சம் இன்றி வாழ்வதற்கே படைக்கப் பட்டன
அவற்றை அவற்றின் வாழ்வைப் பார்த்து
ஆனந்தம் கொள்வதே அவற்றிக்கு நாம் செய்யும்
மகிழ்ச்சி நிறைந்த செயலாகும்
பஞ்சு போன்ற பறவைகளின் மேனி
நம் கரங்கள் பட்டு கசங்கிட வேண்டாமே