புத்துயிர் கொடுப்பாயா....?

ஆண்டென்ற பெயரில் நீ
பன்னிரு மாதம் சுமக்கின்றாய்
ஆயுள் என்ற போர்வையில் நீ
பன்னிரு மாதத்தில் பிரிகின்றாய்

உன்
கடந்த காலத்தில்
கண்ணீரில் ஈழத்தை
நனைய வைத்தாய்

இன்று
2011என்று புதிதாய்
பூத்துவிட்டாய்.

அதனால்
எனக்குள் இருந்த வினாவை
உனக்குள் தொடுக்கின்றேன்.

'உலகுக்கு புதிதாய் பிறந்துவிட்டாய்.
இந்த ஆண்டிலாவது - நீ
தமிழினத்துக்கு
புத்துயிர் கொடுப்பாயா....? "

எழுதியவர் : உடுவையூர் த.தர்ஷன் (5-May-11, 8:55 am)
பார்வை : 292

மேலே