சாதி

பள்ளி சான்றிதழில் முதல் சான்றாய்
பிஞ்சு வயதில் விழுந்த முதல் சாதி.

உடையில் ஒற்றுமை தந்து
சலுகையில் வந்தது எந்தன் சாதி.

காதல் வெல்லுமோ சாதியை
கலவரமே மிஞ்சியது சதியால்.

காலத்தை வென்றது சாதி
அதையும் வென்றது என் கல்லறை.

எழுதியவர் : நவீன்குமார் (25-Apr-15, 9:05 am)
சேர்த்தது : நவீன்குமார்
Tanglish : saathi
பார்வை : 62

மேலே