ஹைக்கூக்கள்பூமி
மனிதனின் மரணம்
மரண பூமி
கொண்டாடுவோம் பூமி தினம்
மண்ணின் கருவறை
உயிர்க்கும் மரம்
பூமியின் சொத்து
பச்சை மரங்கள்
பூமியின்
நுரையிரல்கள்
வாய் பிளந்தது மண்
வெளியேறியது மூச்சு
இறந்தது பூமி
அழுதது வானம்
பூமியில்
அமில மழை
பூமி சிரிக்கிறது
பூக்கள்
இருக்கிறது
அகழ்வாரைத் தாங்கும் நிலம்
இகழ்வாரைப் பொறுத்தல்
நலம்
களவுபோனது மரம்
காணாமற் போனது
பூமியில் மழை
காற்றும் நீரும்
காணமற்போனது
நிலம் நிலவானது
புவி வெப்பம்
உருகும் பனி
நகரம் முழ்கும் இனி
பூமியில் மாசு
நகர வாழ்க்கை
நரக வாழ்க்கை
ராஜ்கவி. சி. அருள் ஜோசப் ராஜ்