காதலனின் நெஞ்சில் மலர்ந்த வெண்தாம ரை - இரு விகற்ப நேரிசை வெண்பா
வெண்பா எழுத விழைந்தேன்நான் இப்பாவை
திண்ணமாய் யாரென்று சொல்செல்வி - வண்ணக்
கவிதீட்ட சப்பானின் பெண்தானோ சீனப்
புவியிலு தித்தவ ளோ? 1
இல்லையில்லை மாமா அவளென் கனவினில்
எல்லையிலாக் கற்பனையில் ஏந்திய - அல்லி
மலரிவளே; காதலனின் நெஞ்சில் மலர்ந்த
புலர்கின்ற வெண்தாம ரை! 2
குறிப்பு:
கண்ணாடியில் Oil paint by டாக்டர் தமிழ்செல்வி மாசிலாமணி.