மழையெனில் யாதென -கீர்த்தி

தவழும் குழந்தை அந்த கதவின் ஓரம் சொட்டும் மழைத்துளியினை எட்டி அதிசயித்து தொட்டிலில் இருந்து பார்க்கும் அழகு......
எதிர்வீட்டு எட்டாம் அகவை சிறுமி கூரையில் பட்டு தெளிக்கும் மழைத்துளியினை அந்த கணக்கு பாடத்திற்கு தத்துக் கொடுக்கும் அழகு....
பக்கத்து வீட்டு பாசமலர் பரிமளா "மழை வந்திடுச்சி! இன்னும் இந்த மனுசனைக் காணலயையே?" என புலம்பிக் கொண்டே செல்லமாய் எட்டி மழைக்கு தலையைக் காட்டும் அழகு....
அம்மாவுக்கு தெரியாமல் அவள் தந்த தேநீரோடு தேங்கி நிற்கும் மழைநீரில் கால் நனைக்கும் அப்பாவின் புன்னகை அழகு......
இதையெல்லாம் தாண்டி மழையை பாசமாய் திட்டிக் கொண்டே அடுக்களையில் குளிர்காயும் அம்மாவின் அழகு....
இத்தனை அழகையும் அள்ளி எப்படியும் கொஞ்சி விட வேண்டும் மழையெனில் யாதென!! கவிதையில்.....