ஜென்மநட்சத்திரம்
போக்கை வாயுடன் உலகத்தை
சிரிக்கவைத்த நாள்.
பிறந்திருந்த அதே தருணங்களை
கொண்ட நாள்.
இன்பத்தின் உச்சத்தில் உறைந்து நிற்கும்
வருடத்தின் ஒரே நாள்.
இன்றும் அதே நாள்தான், மாற்றம்,
என்னை உயிருடன் எரித்துகொண்டிருக்கும்
அலைபாயும் நாள்.