மழையென்பது யாதென -II - கருணா

கண் முன்னே
காணுகின்ற ..
சக மனிதனின்
சாதி மதம் ..பதவி ..
எந்த நிலையும் ..
காணாமல்..
பொழியும்
அன்பும் ..
**********************
எங்கோ ஏற்பட்ட
நிலநடுக்கத்தில்..
வெள்ளத்தில்..
அல்லலுறும் ..
மக்களுக்கு..
முடிந்த வரை
அனுப்பி வைக்கும்
நிவாரணமும்..
**************************
இறந்த பின்னும்
இன்னும் பலர்
இவ்வுலகைக்
கண்டிடவே ..
எதிர்பார்ப்புகள்
இல்லாமல்
செய்கின்ற
கண்தானமும்...
*************************
தன் பசியை
மறக்கின்ற..
தாயின் மீதும்
தனக்கறிவு..கல்வி
தந்த
தந்தை மீதும்..
தனக்காக
வாழுகின்ற ..
துணையின் மீதும்..
மழலைகள்..
நட்புகள்..
எல்லா ஜீவன்கள்..
சக மனித உள்ளங்கள் ..
இயற்கையின் மீதும்..
ஈரத்தை ஏற்படுத்தி
குளிர்விக்கும்
அன்பு
எதுவும்
மழையென்பது ..
யாதென
புரிந்திட..
நன்மைகள்..
விளையுதே !
******************************
(நண்பர் தாகுவின் தலைப்பு தந்த இன்னொரு எண்ணத்தை வரிகளாக்கினேன்..)