முடிவுற்ற பேயலின் முடிவிலியான தூவானம் நீ

முடிவுற்ற பேயலின் முடிவிலியான தூவானம் நீ
============================================


ஒற்றை முடியும் உன் செவிமடலும்
இல்லாததால்
முடிவிலியாகிறது என் கவிதை,,,,!!!

புளகாங்கிதத்தில்
கதிர்த்தேடி அலையும் பட்சியினோடு
முகில் கிழித்த
ஏவுகணைப் பேனா ஒன்று
ஆர்ந்த கமனத்தில்
புகைக்கோலம் வரைந்து
மாயமானத் தருணம்போல்
திறக்க திறக்க
அச்சர கோடுகள்
காணாமல் போகின்றன
வாசிக்காதே என எச்சரித்து ம்ம்ம்ம்,,,,,,,,!!

வாசித்தவரை போதும்
ஆனால் கொதி தீர்ந்தபாடில்லை
நிராசை தான் ,,
எல்லாமிருந்தும்
ஏதும் இல்லாததைப்போல்
வாழக்கற்றுக்கொள்ள
ஏற்கனவே பழகிக்கொண்ட
வழப்பத்திலூடே ,,
இதையும் சேர்த்துக் கொள்கிறேன் ம்ம்,,,,,,,,,!!

விடைகொடுத்தப்பின்னாலும்
திரும்பிப் பார்க்கும் நினைவுகளைப்போல்
தானே திறந்த புத்தகம் நீ
மறைக்கப்பட்ட மையின்
நிர்வாண உணர்வுகள் விலகியப்போதே
கற்பனைகளுக்கு
இடமில்லை என்று மூடிவிட்டேன்
நீ காண்பித்தது
நாணமா பயிர்ப்பா
என்னும் குழப்பத்தினால் அல்லாமல்,,,,,,,,,,,,,!!!

ஒருகோட்டில் பயணிக்கும்
உன் எண்ண அலையை
சிராய்த்துப்போகும் குறுக்கலையாக
இருக்கவிழையாமல்
காற்றுக்கென
காத்திருந்த நாணல்
காலம் தப்பி
கரையில், நதியில் சாய்கிறதைப்போலே
என் போக்குகள் ம்ம்ம்ம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!!

வழப்பமான
கெட்டப் பழக்கங்களுடன்
நேற்றுவரை தோன்றாத
புனரொரு கெட்டப்பழக்கமாக
உன் வரவோர்த்து காத்துக்கிடந்தேன் ம்ம்ம்
நீயோ
கரைசல்குறைந்த மையின்
கறை தீரும்
கடைசி நொடிபோல்
பேசாதே என்ற
என் மோனத்தினோடு
உன் நேரம் போக்கிக்கொண்டிருந்தாய் ,,,,,,,,,,,!!!

கொடுவில்
முடிவேறாத வரிகளுக்கென
தாங்கிப்பிடித்த
அக்கடைத்துளி
உன் அகத்தாளில் ஒற்றாமல்
இதோ இன்று அஃறிணையாகிப்போனது
அந்த ஒற்றை
நிரப்பில் சிப்பத்தின்
கூர்முறிந்த முனை விளிம்பில்,,,,,,,,,,,,,,,,,!!!

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (26-Apr-15, 3:58 am)
பார்வை : 97

மேலே