பயணங்கள் இனிப்பதில்லை

நடைமேடை
அனுமதிச் சீட்டு
பெற்று ..சிலரை
வழியனுப்பி விட்டு வருவதில்
பயணத்தின் களைப்பு
வருவதில்லை..
****
பின்னொரு நாள்
புகைவண்டிப் பயணம் ஒன்று
போகவேண்டி வரும்போது ..
பயணமே வாழ்க்கையாய்
மாறுவதில்லை..
*****
பயணத்தின் போது
இடையினிலே வருகின்ற நட்பு
என்றென்றும் தொடர்ந்து விடும்
பிரியாத உறவென்று
நிலைப்பதில்லை...
****
புகைவண்டிப் பயணமென
வாழ்வை எண்ணி வாழ்க..
உறவுகளும்..உடமைகளும் எல்லாமும்
நிரந்தரமாய் நமக்கென்று
தரப்படுவதில்லை..
****
இடையினிலே செருக்குடனே
வரலாறு மறந்து இங்கு
எப்போதும் தடம் புரளும்
வகையினிலே பயணிக்கும்
பயணங்கள் இனிப்பதில்லை !
*****

எழுதியவர் : கருணா (25-Apr-15, 11:23 pm)
பார்வை : 168

மேலே