மழையென்பது யாதென-------அஹமது அலி----

தன்னைத் தானே
செல்பி எடுக்க
தரையில் விழும்
மேகம்...!
''''''''''''''''''''''''''
''''''''''''''''''''''''''
புவிக் குழந்தைக்கு
அமுதூட்டின
ஆகாய மார்புகள்...!
''''''''''''''''''''''''
'''''''''''''''''''''''
பிரம்மனின்
அடுக்கு முறை பிரசவத்தில்
உச்சியில் பிறந்தவனுக்கு
என்றில்லை;

அடி பிறந்த அடிமையென
எழுதி வைத்து நடைமுறை
கொடுமைகளுக்குள்ளான
அவனுக்குமே..!
'''''''''''''''''''''
'''''''''''''''''''''
அம்பானிக்கும்
அதானிக்கும்
வியர்க்குதென்றால்
மோடு திறக்கும்
பிரதான விசிறியல்ல;

ஏழைக் குடிசைக்கும்
அநாதைக்குமே..!
''''''''''''''''''''''
''''''''''''''''''''''
மலைப் பிரதேசங்கள்
பச்சை வயல்கள்
பசுமை வனங்கள்
என்றெலாம் பார்ப்பதில்லை;

கொடும் பாலையிலும்
பால் வார்க்கும்...!
'''''''''''''''''''''''''''
'''''''''''''''''''''''''
உப்பிடும் கடலுக்கும்
உப்பிட்ட வள்ளல்

நிறை நீர் சமுத்திரமாகினும்
நன்னீர் தரும்
தண்ணீர்ப் பந்தல்...!
'''''''''''''''''''''''
'''''''''''''''''''''''
தேசம், இனம்
மதம், சாதி
குலம், கோத்திரம்
எச்சாத்திரமும் பாராத
அமுத சுரபி...!
'''''''''''''''''''''
'''''''''''''''''''
மழையென்பது யாதெனக் கேளும்

சமத்துவத்தின்
தூதுவன்

வான்குடை விரித்தவனின்
அருட்கொடை..!

எழுதியவர் : அலிநகர்.அஹமது அலி (26-Apr-15, 9:22 am)
பார்வை : 160

மேலே