இருவர் சந்திப்பு

ஆண்: சிந்திட சிந்திட தானே
சித்தைகள் பூத்திட்ட மானே
வந்திடு வந்திடு தேனே – மனம்
கெஞ்சுது கெஞ்சுது தேனே
வெற்றிலைக்கொடியே வெள்ளரிக்கனியே
சந்தனமலையே சந்நிப்போம் தனியே

பெண்: சுந்தரன் அழகில் சுட்டது மனமே
இந்திரன் இவனோ இளைப்பாரும் இடமோ

ஆண்: இளஞ்சோலையில் பூத்திட்ட ஆவாரம்பூ சேலை
சூடிட வந்தேனடி தேவாரம்பூ மாலை
முட்புதரின் மலரே முடிவில்லா நினைவே
வளர்பிறையில் வந்த வானகத்தின் நிலவே

பெண்: அழைத்ததும் வந்தேன் என் ஆதவன் நீ என்று
ஆசையில் சேரத்தான் உன் அங்கத்தின் பாதியில் நான் என்று

ஆண்: மெட்டியும் வாங்கிவந்தேன் மேலத்தாளமும் பார்த்துவந்தேன்
உன் கண்ணசைவில் பாவம் காட்டு மங்களத்திருவிளாவை நான் முடிப்பேன்

பெண்: மத்தியில் பொட்டு வைக்க மாமனவன் தூதுவிட்டான்
மஞ்சத்தில் போட்டு வைத்தேன் பல எண்ணங்களை போர்த்திவைத்தேன்
முந்தி முடிந்திடத்தான் காத்திருக்கு நாணப்பில்லு
முடியாம போச்சுதுன்னா முருச்சுக்குவேன் தொண்டமுல்லை

ஆண்: விண்ணுக்கும் மண்ணுக்கும் விடியல் ஒரு சந்திப்பு
வில்லங்கம் இல்லா விவாகம் நாம் முடிப்போம்..

எழுதியவர் : கொடிசிவம் (26-Apr-15, 1:16 pm)
சேர்த்தது : prathish.p
Tanglish : iruvar santhippu
பார்வை : 141

மேலே