கூட்டுக் குடும்பம் -தொடர்கதை

கூட்டுக் குடும்பம் -5
இன்னும் இரண்டே நாட்கள் உள்ளன நாம் மீண்டும் நம் வீட்டிற்கு செல்ல என்று நான்கு நண்பர்களும் பேசிக்கொண்டிருந்தனர் .

குமரேசன் ஓடி வந்து அப்புவை அழைத்தான் .அப்பு உனது அம்மா தொலைபேசியில் லைனில் உள்ளார்கள் வா சீக்கிரம் என்று அழைத்தான்.அப்பு வேகமாக சென்று பேசதொடங்கினான்.அம்மா நலமா அப்பா எப்படி இருக்கிறார் என்று விசாரித்தான்.
அப்புவின் அம்மாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது நம் பையனா இப்படி பொறுப்பாக பேசுகிறான் என சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனாள்..அவளும் நலம் விசாரித்து அவன் படிப்பு குறித்து விசாரித்து இணைப்பை துண்டித்தாள்.

அன்று இரவு அப்புவின் அம்மா மிகுந்த பூரிப்புடன் அப்புவின் தந்தையிடம் எனது மகனைப் பற்றி எப்பொழுதும் குறை சொல்வீர்களே அவனுக்கு நம்மைப் பற்றி அக்கறை இல்லை என்று இன்று அவன் எவ்வளவு மரியாதையாக பேசினான் தெரியுமா நம்மைப் பற்றி எல்லாம் எவ்வளவு அக்கறையோடு நலம் விசாரித்தான் தெரியுமா என்றாள் மகிழ்ச்சி பொங்க .அப்புவின் அப்பா கண்ணன் தலையாட்டிக் கொண்டே தெரியும் லட்சுமி இந்த வயதில் அவனுக்கு தனிமை எண்ணம் வராது நல்லோர்களின் ஆலோசனையும் அனுபவமும் தேவை இதை உணர்ந்தே அவனது ஆங்கில ஆசிரியை என்னை கூப்பிட்டு இந்த முயற்சியை கூறினார் நானும் ஒப்புக் கொண்டேன் என்றார் கண்ணில் இருந்து வழிந்த இரண்டு சொட்டு கண்ணீரை துடைத்துக் கொண்டே...

அப்புவின் அம்மா லட்சுமி என்ன அவன் ப்ராஜெக்ட் விசயமாக தானே ஆசிரியை அனுப்புவதாஅனுப்புவதாக கூறினான் என்றாள் பதட்டமாக.

ஆமாம் நான்தான் ஆசிரியையிடம் அவ்வாறு கூற சொன்னேன் நீ ஒரே பிள்ளை ஒரே பிள்ளை என்று எங்கும் அனுப்பாமல் செல்லம் கொடுத்து கெடுக்கிறாய்

இப்பொழுது அவன் மற்றவர்களிடமும் அவ்வாறு நடந்து கொள்வது எனக்கு பிடிக்கவில்லை இதைப்பற்றி அவனது ஆசிரியையிடம் விவாதித்தேன்..பிறகே இப்படி முடிவு செய்தோம் என்றார் மகிழ்ச்சியாக. ..

......தொடரும்.....

எழுதியவர் : சிவ.ஜெயஸ்ரீ (26-Apr-15, 4:34 pm)
பார்வை : 332

மேலே