மழையென்பது யாதென
(எனக்கு மிகவும் பிடித்த தலைப்பை நேற்று தான் பார்க்க நேர்ந்தது)
மழை
சொன்னாலும் அழகு
பார்த்தாலும் அழகு
நனைந்தால் மிக அழகு
நினைத்தால் கூட மிக மிக அழகு .
மழை வந்தால்
மண்ணுக்கு
அந்த அழகிய பூமி பெண்ணுக்கு
எல்லை இல்லா சந்தோசம்
மழை முத்தத்திற்கு
பரிசு
பல வண்ண மலர்கள்
பூமிக்கு குடை பிடிக்குதோ
சின்ன சின்ன காளான்கள்
வைரத்தை உருக்கி வானக்காதலன்
பூமிக்கு போடும் பொன்னாரம்
அப்படி
ஒரு மழை நாளில் தான்
என் குட்டி தேவதையே
நீயும் என் மகளாய்
பூமிக்கு வந்தாய்.
சின்ன சின்ன குறும்புகளுக்கு
நான் செல்லமாய் திட்ட
நீ செல்லச் சிணுங்கல்
சிணுங்கி கோபித்துகொண்டு
ஓடினாய் கொட்டும் மழையில்!
அழைக்க அழைக்க
நீ திரும்பி பார்க்காமல்
நனைந்து கொண்டே நிற்க
முதுகில் ரெண்டு
கொடுக்க வந்த
நானும்
நீ மழையில் நனையும்
அழகை பார்த்துக்கொண்டே
நனைந்தேனே.
இதுதான் மழையின் மாயமா ?