இயற்கை
இயற்கையின் சீற்றம் எந்த ரூபத்தில்
வரும் என்பது எவருக்கும் தெரியாது
கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம்
தவிடு பொடி அடுக்கு மாடிகள் தரை மட்டம்
இது காலத்தின் அகோரமா/ கடவுளின் தண்டனையா/
இல்லை உலக அழிவின் எச்சரிக்கையா/
படு பயங்கரம் நிகழ்த்தி வேடிக்கை பார்க்கிறது இயற்கை
அச்சம் என்பது மடமையடா என்ற பாடல் அன்று
அச்சம் கொள் அன்பைக் கொள் ஆசையை அடக்கு இன்று
எல்லாம் ஆண்டவன் செயல்
அவன் நம்பிக்கையில் நம் வாழ்வு நகர்ந்திடும் நலமுடனே