மழையென்பது யாதென

இரக்கத்தை எதிர்பார்த்து ஏங்கும் கைக்கு
இருக்கின்றேன் எனச்சிந்தி ஏந்தச் செய்வாய் !
இருப்போர்கள் கொடுக்காமல் ஏய்க்கும் போழ்து
சிரிப்போடு உறவாகிச் சிந்தச் செய்வாய் !
இருபேரும் சமமென்றே ஏற்கும் பேராய்
இருளோட்டி இடிமின்னல் என்றே வாராய் !

இடைகண்டும் நடைகண்டும் ஏக்கம் காணும்
மடையர்க்கு புரியச்செய் மண்ணின் தேரை !
நடைபின்னித் தவழ்கின்ற நாட்கள் தீண்ட
கடைசாத்திப் புறப்பட்டால் காற்றும் யாரோ !
உடையீரம் உலர்ந்திட்டால் ஒட்டா(து) என்றே
விடைசொல்லித் திகழ்வாயே வீழ்ந்தே நீயும் !

அடித்துப்பெய் அவலங்கள் அற்றுப் போக
கடிவாளம் அறுத்தோடும் காளை போல !
பிடிவாதம் உனக்குண்டு பேயாய் ஊற்று
முடிவின்றித் தொடர்தேபெய் முற்றும் தீர !
வடிகாலில் வழிந்தோட வன்மம் மாய
விடிகாலைப் புதிதாக்கி விந்தை காட்டு !

*** மீ.மணிகண்டன்***




-தலைப்பளித்து வாய்ப்பளித்த thaagu வாழ்க. நன்றி.-

எழுதியவர் : மீ.மணிகண்டன் (28-Apr-15, 10:47 am)
பார்வை : 214

மேலே