உன் மௌனம் - சகி

என்னவனே ......

ஊடல் கொண்டு
என்னுளிருக்கும் உன்னை
வதைக்காதே .........

என் இதழ்கள் மௌனம்
கொண்டாலும் இதயம்
உன் மௌனத்துடன்
போர் புரிகிறது .........

கண்கள் கலங்கினாலும்
கண்ணீரிலும் உன் முகமே ..........

மௌனமென்னும் சிறையில்
அகப்பட்டு நான் படும்
இன்னல்களை அறிவாயோ .........

உறங்கா இரவுகளும்
விழித்திருக்கும் விழிகளும்
என்றுமே கண்ணீரில் ..............

எந்நொடியும் வேண்டாம்
நமக்குள் மௌனம்
என்னும் பிரிவு .......

மௌனம் கலைத்து விடு .........

இல்லையெனில் என்னை
மொத்தமாய் தொலைத்துவிடு
இம்மண்ணில் .............

எழுதியவர் : சகிமுதல்பூ (28-Apr-15, 2:01 pm)
பார்வை : 317

மேலே