நெருஞ்சி முள்ளில் தூங்குகிறேன்

தாய்மடி சுகத்தை தரும்
அழகிய தலைவா!
நீ தலைகோதும் நாளிற்கான
நாட்களை எண்ணி எண்ணி
நாழிகையை நகர்த்துகிறேன்

நெருக்கத்தில் நீயில்லததால் தினம்
நெருஞ்சி முள்ளில் தூங்குகிறேன்
கற்பனையை கனவாக்கினேன்
உனக்கான காத்திருப்பில்
கனவிலும் கால்கடுத்துவிட்டது .

காதலனே கடல்கடந்து சென்றவனே!
காலதேவன் கணக்கை முடித்து
காலம் தாழ்த்தாமல் வந்துவிடு
நான் தலை சாய்த்துக்கொள்ள
உன் நெஞ்சத்தை தந்துவிடு .

எழுதியவர் : ப்ரியாராம் (28-Apr-15, 4:29 pm)
பார்வை : 159

மேலே