சந்திப்பு

சந்திப்புக்கள்
""""""""""""""""""""""""

நடிப்பு கலந்து
ஏதேதோ பேசிக்கொண்டுருக்கிறோம்!
கடந்தகால பிரியங்களை
நாக்கு தொட முற்பட்டாலும்
நழுவல்கள் முந்திக்கொள்கின்றன!

பகிரப்படாத விசயங்களை
அறியமுற்படும் ஆவல்கள்,
இங்கு தோற்ற வண்ணம் இருக்கின்றன.

இடை இடையே நீண்ட மெளனமும்
ஒருவரை ஒருவர் பார்வையில்
விழங்குவதும்""

சேர்ந்து இருக்க வேண்டியவர்கள்?
அன்றைய கோழைத்தனம்
இன்று இரு துருவங்கள் ஆகி..,,

காலம் கடந்து
மீண்டும் ஒருமுறை!
பிரிவுத்தீயில் எரியும்
சடலங்கள் ஆக"""

ஒருவரை ஒருவர்
இழந்த வலிகள்
பாசைகளில் மெளனமானாலும்
பார்வைகளில்"""
வியாபித்து இருந்தது!!!
லாஷிகா
"""""""""""""""""""

,

எழுதியவர் : லவன் கேர்ணிங் டென்மார்க் (28-Apr-15, 11:57 pm)
Tanglish : santhippu
பார்வை : 117

மேலே