கவியவளின் கன்னத்தோடு - 10 - தேன்மொழியன்

கவியவளின் கன்னத்தோடு - 10
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காற்றின் கைகள் ..உன்
காதணியைக் காதலித்த
கற்பனைற்ற கணங்களில்
கார்மேகத்தின் உடலுடைத்த
காவிய தூரல்கள் புவியெங்கும் ...
கட்டை விரலருகே ..உன்
கரு மச்சத்தின் உச்சத்தில்
கடவுளின் ரேகையாய்
காலங்களின் கதவடைத்த
கற்பக கனவுகள் கரமெங்கும் ...
திகட்டாத திரவத்தில் ..உன்
திரைமறைவும் திரிந்து விழ
திசைமாறிய தீபங்களில்
தீர்ந்துவிட்ட திறன்களால்
திரட்டியக் காதல் தேகமெங்கும் ..
புருவத்தின் அசைவுகள் ..உன்
புடவையிலும் பொங்கி வர
புலராத புலமைக்குள்
பூப்படைந்த புதுக்கவியின்
புன்னகைப் புதிர்கள் முகமெங்கும் ..
- தேன்மொழியன்
இன்று பிறந்த நாள் காணும் அவளுக்கென ..