ஒரு காத்திருப்பின் பின்னால்

ஒரு காத்திருத்தலின் பின்னால்..
சோர்வு மட்டுமா உள்ளது..
உற்றுப் பாருங்கள்..
அதன் விளைவுகளை..
என்றாள்..
அவள்..!
..
என்னைக் காக்க..
வைத்தவளின் கீதை..
..
தாயின் கருவறையில்
பத்து மாதக் காத்திருப்பில்
பின் எப்போதும் கிடைக்காத
பேரின்பமும் ..வளர்ச்சியும்..!
..
தாயின் அமுதூட்டும் நேரம்
வர காத்திருத்தலில்
கற்றுக் கொள்வது
வேண்டுவது கேட்கும் முறை!
..
காதல் கூட..நிறைவேறக்
காத்திருத்தலில்
நீட்டிக்கப்படும் காதல்
அடைவது தனி சுகம்..
..
நாளைக் காலைதான்
மலர இயலும் என்றாலும்
அதுவரை காத்திருத்தலில்
அரும்பாய் இருக்கின்ற
அழகு பெரும் இன்பம்!
..
நட்பின் வரவுக்கென்று
நடு நிசியில்
விழித்தபடி காத்திருத்தல்
விரிவாக்கும் ..
நட்பின் எல்லை !
..
தாய்மை அடையும் வரை
பிஞ்சுமுகம் எண்ணி எண்ணி
பூரித்து காத்திருத்தல்
பெண்மைக்கு
கொள்ளை இன்பம்..!
..
இன்னும் எவ்வளவோ ..
இருக்கின்றன..கேள்..
சொல்லத்தான் நேரமில்லை
ஒவ்வொரு காத்திருத்தலும்
ஒரு அனுபவத்தை
தந்து செல்லும்..!
..
மனிதனும் கூட
வாழ்ந்து முடிக்கையிலே
மீளாத் துயிலுக்கென
காத்திருத்தல் பின்னால்
நீண்ட வாழ்வின்
அனுபவம் சிரித்திருக்கும்..!
..

இனி எப்போதும்
காத்திருப்பேன்..
இது போல் அவள்
இனிய மொழி கேட்டிருப்பேன்..
ஏனென்றால்..
காத்திருத்தல்..
என்பது
ஒரு சுகம்!..
அனுபவம்!

எழுதியவர் : கருணா (29-Apr-15, 4:27 pm)
பார்வை : 958

மேலே