கடவுள் பெரிய வித்தகனடி

கடவுள்
பெரிய வித்தகன் தானடி...?!

காயமும் தந்து,
காலம் எனும்
மருந்தும் பூசுகிறானே...
( கடவுள்...?! )

கிள்ளியும் விட்டு -குழந்தையை,
கிள்ளியும் விட்டு
ஆட்டியும் விடுகிறானே - தொட்டிலை,
ஆட்டியும் விடுகிறானே...!
( கடவுள்...?! )

ஓராயிரம் உறவை
சேர்த்து வைத்து -உன்னோடு
சேர்த்து வைத்து,
உயிரான ஒற்றை - உறவை
மட்டும் பிரித்து பிரித்து வைக்கிறானே....!
( கடவுள்...?! )

உயிரான ஓர் உறவை - மட்டும்
சேர்த்து விட்டு,
ஒட்டு மொத்த
சொந்தங்களையும் பிரித்து வைக்கிறானே...!
( கடவுள்...?! )

அரசனை
ஆண்டியாக்கி,
ஆண்டியையும் அரனாக்குகிறானே...!
( கடவுள்...?! )

புத்தி உள்ளவனிடம்
பொருளை பறித்து,
பொருள் உள்ளவனிடம்
புத்தியை பறித்து விடுகிறானே....!
( கடவுள்...?! )

படிக்காதவன்- இன்று
முதலாளி...
படித்தவனோ - அவனது
தொழிலாளி...!
கடவுள்
பெரிய வித்தகன் தானடி ...?!

எழுதியவர் : கோபி (29-Apr-15, 4:23 pm)
சேர்த்தது : GOPI.M
பார்வை : 64

மேலே