என்னவனே - சகி
என்னவனே .....
உன் காதல்மொழிகளை
என் காதோரம் ரகசியமாய்
நீ இசையமைக்க ........
புல்லாங்குழலில் இருந்து
வரும் தென்றல்
இதமாய் என்னிதயம்
திருட ...........
உன்னுள் மொத்தமாய்
சரணடைகிறேன் ...........
உன் இதயகூட்டிற்குள்
காதல் பறவையாக...........
இருவருமே காதல்
பறவைகளாக வலம்
வருவோம் நம் ஆயுள்
முழுவதுமே ...........