காதல் கனாவாய் ……
காதல் ..
வெற்றுபேப்பரில் எழுதிய
கவிதை ….!
வர்ணம் தீட்டிய
சித்திரம் …!
செதுக்கி எடுத்த
ஓவியம் .!
அலைபேசியில்
பாடும் கீதம் ..!
நேரிலே மௌனராகம் ….!
மணம் வீசும்
வசந்தம் …!
விண்ணைதொட்டு நிலவு
கொணர்ந்து …
கண்ணில் என்றும்
ஏக்கம் நிறைத்து …
எண்ணி எண்ணி தூக்கம்
தொலைத்து ….
இன்னும் இன்னும்
என்னனமோ
என்று உசிரைக்கூட
உசுப்பி நிற்க்கும் ….!
பலருக்கு
இது இப்படித்தான் …!
சிலருக்கு மட்டும்
ஏனோ இது கனவாக …!