கர்ப்ப காலத்தில் 2

கர்ப்ப காலத்தில் ...(2)
------------------------
நீண்ட நேரம் நிம்மதியான
நித்திரை வேண்டுமென்றால் ..
நீட்டி நிமிர்ந்து நித்திரை கொள்வேன் ...
மனிதன் நிலையற்ற நிலையான நிமிடகளும் அதுவே !
நீ வந்ததும் முதலில் என் நித்திரை நிமிடத்தை மாற்றி அமைத்தாய் ...!
வலது பக்கம் புரண்டால் உனக்கு வலிக்குமோ ...!
இடது பக்கம் புரண்டால் உனக்கு
சுளுக்குமோ ...!
குப்புற படுத்தால் உனக்கு
மூச்சு முட்டுமோ ...!
மல்லக்க படுத்தால் உனக்கு
மயக்கம் வந்திடுமோ..!
இப்படி எண்ணிஎண்ணி கழிக்கிறது
என் இரவுகள் ...
உனக்கும் எனக்கும் சேர்த்து
வலியின்றி விழிகொள்ள வழிசொல்லிவிடு..
என் செல்லகுட்டியே ..!

எழுதியவர் : majafa (1-May-15, 1:11 am)
சேர்த்தது : majafa
பார்வை : 105

மேலே