முகவரி இல்லாத அந்த முத்தம்

கோடை வெயில் தாகத்தை தணிக்கவே அன்று பெய்ததோ அந்த கோடை மழை.
மழையில் குளித்து கொண்டே நடந்து வந்த என் தேகம் நடுக்க துவங்கியதே ...

அத்தை வீடு அருகில் தானே சற்றே அமர்ந்து விட்டு செல்வோம் என்று எனக்கு
அந்த அந்தி மாலை பொழுதில் தோன்றிய யோசனைக்கு மட்டுமே கிடைத்தது இந்த யோகம் ..

அத்தை வீட்டு வாசல் கதவுகளின் இடையில் உள்ள விரிசலை கண்டபடியே ஓர் வழிபோக்கன்
போல் வாசல் வாசல் திண்ணையிலே அமர்ந்ததேன்...

அதுவரையிலும் எனக்கு தெரியவில்லை அத்தை வீட்டின் அங்ககள் உறுவுகளை தேடி ஊர் பயணம்
சென்றிருப்து ..பற்களே ! என் அத்தை மகளின் மேல் அவ்வளவு பாசமா உனக்கு அவளை காண வேண்டும் என குளிர்வது போல் கூச்சலிடுகிறாய் ......

பற்களின் பாசங்கிற்கு பதில் கிடைத்தது பாத கொலுசுகள் சத்தம் சற்றே விரிசல் கொண்டிருந்த
வாசல் கதவுகளை விரிய துவங்கியது உடல் முழுவதும் உள்ளிருக்க அவள் முகம்
மட்டும் வெளியே வந்து முழு நிலாவை ஒளிர துவங்கியதே .

குளிரால் நடுங்கி கொண்டிருந்த என் தேகத்தை கண்ட கனமே பதறியவள் பாசத்தால் கதவுகளை
பட்டென்று விலக்கி பொய்யான ஓர் முறைப்பால் அவள் முறை பெயரை கூறி வாசலிலே
அமராமல் வந்ததும் அழைத்திருக்க கூடாத என்று என்னிடம் குறை கூறினால் ..

அவள் அழைத்த அடுத்த நிமிடமே என்னையும் அறியாமல் அவளை பின் தொடர்ந்ததே என் ஆசை
அழைத்து சென்று அமர வைத்து தொப்பையாய் நனைந்திருந்த என் தேகத்தினை துடைபதற்கு
அவள் சேலை முந்தானை நுனியால் முகம் மூடிய அந்த நொடி முச்சடைத்து விட்டதே

தலை துவட்டும் பொழுதே தடுமாறிய அவள் தேகத்தின் இளம் சூடு இன்னும்
எனக்கு நினனைவில் இருக்கிறதே ...

இருவரும் காதல் வசப்படவில்லை காம வசபடுவத்ற்கான காலமும் இல்லை இருந்தும் ஓர் இன்பம்
இருவருக்கிடையே இதனை சொல்வதற்கு என்னிடம் வரதிகள் இல்லை ..

மழையும் மண்ணும் முத்தமிடும் சத்தம் நின்று விட்டதே என்று அப்பொழுதுதான் என் நினைவிற்கே
வந்தது .இருவரின் மௌனத்திற்கு இடையில் ஒரு மெல்லிய ராகம் உறைந்திருந்த நிமிடங்கள்
உடைந்தன அந்த மௌன ராகம் என் கை பேசியின் கதறல் ..

அவள் அத்தையிடம் இருந்து தன அழைப்பு அழைப்பினை துண்டித்து விட்டு புறப்படலாம் என்று
அடி எடுத்து வைத்தேன் அவள் என்னை இழுத்து அனைத்து இட்ட முத்தம் இன்னும்
என் முகங்களில் பதிந்து இருகின்றதே ...

பிரிய மனம் இல்லாமல் அவள் முத்தத்தை மூட்டை கட்டிகொண்டே ஒரு பொன் சிரிப்போடு
அந்த பொன் மாலை பொழுதுதிருகவே என் வீடு வந்து சேர்ந்தேன்....

அன்று அவளோடு இருந்த நிமிடங்கள் "காதல்" என்று சொன்னால் காமத்தோடு சேர்ந்து விடும்
"காமம் " என்று சொன்னால் காதல் கைகோர்த்து கொள்ளும் இன்னும் என் இதயத்திற்கு
தெரியவில்லை அந்த முத்தத்தின் முழுமையான முகம் ....

எழுதியவர் : மனோஜ் (1-May-15, 7:12 am)
சேர்த்தது : மனோகுட்டி
பார்வை : 195

மேலே