உழைப்பாளி

;------;----------;---------;---------;-------;------;--------;--------;
எத்தனை முறைதனில்
வளைந்து கொடுத்தாலும்
கொத்தாக வேரைச் சாய்க்கும் வரை
மஞ்சைப்பையில் ஒளிந்திருக்கும்
வறுமை எனும் ஒத்தபைசாவை
உற்றுப் பார்த்துக் கொண்டுதான் இருக்கும்
ஊழல் துறை எனும் காவிச் சட்டை

கஞ்சா பொட்டலமும்
உல்லாசமாக செல்வதனால்தானோ
தண்டனையாக ஊதியம் இன்றி
உபசரிக்கிறார்கள்
இலவசமாய் நிலவு பார்க்கும்
ஓட்டை வீட்டின் வெள்ளைக்காரரை

வெள்ளத்தில் மூழ்கிய
எறும்பினைப் போல
உள்ளத்தில் தேறிய -வறியவனின்
கவலைகள் கன்னக் குழிகளில்
கசிந்த வண்ணமே உள்ளது
களைப்பு தீர்ந்த பின்னும்
வயிற்றுப்பிழைப்பு தீராமல் இருப்பதனால்

கொட்டும் மழைத்துளி
சொட்டும் வியர்வைத்துளியினை மறைத்து
மாறுவேசம் போட்டாலும்
கைகளில் ஏந்திய வலிமை எனும் ஆயுதம்
தோற்றத்தில் தோற்க வைத்தாலும்
மனம் மாறன் பணம் இல்லாத உழைப்பாளி

எழுதியவர் : கீர்த்தனா (1-May-15, 8:40 pm)
Tanglish : uzhaippaali
பார்வை : 817

மேலே