வென்று விடுவதற்காக
என் மதி தோட்டத்தில்
சிந்தனை மலர்களை
நான் பரித்துக்கொள்ளும் வேளை
பரிக்கப்படாத மலர்களின் மணம்
என் மீது வீசும் வேளை
வீசும் மலர் மணம் என்னோடு
நேசம் கொள்ள எண்ணியது
நான் என் வேஷத்தைக் கலைத்து விட்டேன்
மலர்கள் மகிழ்ந்தன
வேஷத்தை கலைத்துவிட்ட நான்
வேட்கைகளையும் நிறுத்திவிட்டேன்
மலர்கள் அதை வரவேற்றன
மௌனத்தை வாசித்தேன்
தியானத்தை ஸ்வாசித்தேன்
என்னோடு நேசம் கொள்ள எண்ணிய
வீசும் மலர் மணம்
தோஷமின்றி முனைந்தது
தூதுகளை புனைந்தது
அதோ வானத்தில்
ஆன்றோர்கள் அருளிய அறிவுறைகள் போல்
முகில்கள் தவழ்கின்றன
உறவு கொள்ள என்னை அழைக்கின்றன
இன்னும் மலராத
ஒரு மலர் சொன்னது
"எனக்காக காத்திரு" என்று
என்னை நான் கழித்துக்கொண்டது போக
நான் தயராகிவிட்டேன்
வென்று விடுவதற்காக!