வலிகளா மருந்துகளா
![](https://eluthu.com/images/loading.gif)
அசைவ குயிலின்
அலகுகளுக்குள்
கெழுத்திமீன்
முட்கள்!!
அரங்கேற்றத்தில்
முகாரியா!
மோகனமா!
மூங்கில்களின்
மேனியில்
பிதுங்கும்
பூபாளம்!!
இசைமீட்பது
வண்டுகளா!
உதடுகளா!!
இலையுதிர்
காடுகளின்
இராட்ஸத
சிலந்தி வலையில்!!
உருண்டு திரள்வது
பனித்துளியா!!
உயிர்த்துளியா!
பனங்கள்ளு
போதையிலே
தடுமாறும்
கிழவனுக்குள்!
புதைந்துகிடப்பது
பசுமைகளா!
பதுங்கு குழிகளா!!
எழுத்தாணிகளின்
முனைகளை
விட்டு இறங்க
மறுக்கும் என்
அழுகைகளில்!!
உறங்கி கிடப்பது
உன் மெளனங்களா!
நிழல்களின் விஷங்களா!!
தாய்மடிச்சூட்டில்
உலரும் உன்
ஊமை
பிரிவுகளெங்கும்!
சிதறிக்கிடப்பது
கவிதைகளா!
நினைவுகளா!
உன் இதழோர
புன்னகையின்
வர்ணமாயத்தில்
தொலைந்தது
சோகங்களா!
வாலிபமா!
வினாக்களை
தொடுக்கும்
கவிதையில்
நான்!!
பிரளயமா!
பிரபஞ்சமா.....